தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து அணியை இரு சிறுவர்கள் அறிவித்ததால் ஆச்சரியம்

1 mins read
24b7c880-f1de-4aef-a245-0973673a0f11
டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக நியூசிலாந்து அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர்களை அறிவித்த சிறுவர்கள். - படம்: பிளேக் கேப்ஸ்/டுவிட்டர்

அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவை எட்டுவதற்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், இவ்வாண்டின் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

கேன் வில்லியம்சன் தலைமை தாங்கும் அணியில் ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, டேரல் மிட்செல் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய நச்சத்திரப் பட்டாளம் உள்ளது.

நியூசிலாந்து அணியின் தேர்வை பலரும் எதிர்பார்த்து இருந்தாலும், அணி அறிவிக்கப்பட்ட விதம் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சமூக ஊடகங்களில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட காணொளியில், அணியை அறிவிக்க செய்தியாளர் கூட்டத்திற்கு சிறுவர்கள் இருவரை தான் அனுப்பியதாகக் கூறியது.

ஆங்கஸ் என்ற பெயருடைய சிறுவனும் மட்டில்டா என்ற பெயர் கொண்ட சிறுமியும் அணி வீரர்கள் அனைவரின் பெயர்களையும் அறிவித்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்துப் பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், “இன்று அறிவிக்கப்பட்ட அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன். உலகப் போட்டி ஒன்றில் உங்கள் நாட்டைப் பிரதிநிதிப்பதற்கான சிறப்பான தருணம் இது,” என்றார்.

தமது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் ஆச்சரியப்படுத்தி வரும் ரச்சின் ரவீந்திரா, டி20 உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியில் முதல்முறையாக இடம்பெறுகிறார்.

குறிப்புச் சொற்கள்