தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உச்சக்கட்டத்தை நோக்கி ரியால், பயர்ன்

1 mins read
cd8bd649-7f60-4b6c-a2a6-f9e2e0952a30
பயர்னுக்கு எதிரான ஆட்டத்தில் ரியாலுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கும் வினிசியஸ் (சீருடை எண் 7). - படம்: இபிஏ

மியூனிக்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பிரபல குழுக்களான ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன.

பிரேசிலிய நட்சத்திரம் வினிசியஸ் ஜூனியர் ரியாலின் இரண்டு கோல்களையும் போட்டார். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரியாலை முன்னுக்கு அனுப்பினார் வினிசியஸ்.

பின்னர் 53வது நிமிடத்தில் பயர்னின் லிரோய் சானே கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். 57வது நிமிடத்தில் இங்கிலாந்து நட்சத்திரம் ஹேரி கேன் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி பயர்னை முன்னுக்கு அனுப்பினார்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே எஞ்சியிருந்த வேளையில் ரியாலுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் வினிசியஸ்.

இந்த ஆட்டம் பயர்னின் சொந்த அரங்கில் நடைபெற்றது. இச்சுற்றில் இரண்டாவது முறையாக இவ்விரு குழுக்களும் ரியாலின் சொந்த அரங்கில் மோதும்.

இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்