தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: ஏழு முறை தோல்வியடைந்துவிட்ட மும்பை

1 mins read
ee414ee4-651d-4b35-97be-713d8b1d90a5
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பந்து வீசும் மும்பையின் ஹார்திக் பாண்டியா. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

லக்னோ: தற்போதைய ஐபிஎல் கிரிக்கெட் லீக் பருவத்தில் ஏழாவது முறையாக தோல்விகண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இந்தியன்சை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பந்தடித்த மும்பை ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது லக்னோ.

லக்னோவுக்கு ஆக அதிக ஓட்டங்கள் எடுத்தவர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ். அவர் 45 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.

மும்பைக்கு ஆக அதிக ஓட்டங்கள் எடுத்தவர் நேஹால் வதேரா. அவர் 41 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்தார்.

முதலில் களமிறங்கிய பந்தடிப்பாளர்கள் சிறிது நேரத்திலேயே ஆட்டம் இழந்தது மும்பை தோல்வியடைந்ததற்கான காரணம் என்றார் அதன் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா.

“ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்த பிறகு மீண்டுவருவது சிரமம். சரியாக விளையாடவேண்டிய அம்சங்களில் எங்களால் சோபிக்க முடியவில்லை,” என்று ஆட்டம் முடிந்த பிறகு கூறினார் ஹார்திக்.

குறிப்புச் சொற்கள்