தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பர்சைத் திக்குமுக்காடவைத்த செல்சி

1 mins read
676a2d24-1256-47e4-8e75-02e1cbcfe9d9
ஸ்பர்சுக்கு எதிராக செல்சியின் இரண்டாவது கோலைப் போடும் செல்சியின் நிக்கலஸ் ஜேக்சன் (நீல சீருடை). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது செல்சி.

ட்ரெவர் ‌ஷாலோபா, நிக்கலஸ் ஜேக்சன் ஆகியோர் செல்சியின் கோல்களைப் போட்டனர்.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஸ்பர்ஸ் அடுத்தப் பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்புகள் சரிந்தன. சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதிபெற பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கவேண்டும்.

மேலும், தொடர்ந்து மூன்று லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்துவிட்டது ஸ்பர்ஸ். செல்சிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு ஆர்சனலிடம் 3-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த ஸ்பர்ஸ், அதற்கு முன்பு நியூகாசல் யுனைடெட்டிடம் 4-0 என படுதோல்வி கண்டது.

தனது விளையாட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை ஸ்பர்ஸ் நிர்வாகி ஆஞ்சி பொஸ்டக்கொக்லு ஒப்புக்கொண்டார்.

“நாம் மனவுறுதியையும் ஓரளவு நம்பிக்கையையும் இழந்துவிட்டது எங்கள் விளையாட்டில் தெரிந்தது. இதை மாற்றுவது எனது பொறுப்பாகும்,” என்றார் பொஸ்டக்கொக்லு.

குறிப்புச் சொற்கள்