தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: நூலிழையில் வென்ற ஹைதராபாத்

1 mins read
1d3edf70-b7ec-4287-99f7-7620d123f7fb
ராஜஸ்தானின் ரியான் பராகை வெளியேற்றிய பிறகு கொண்டாடும் ஹைதராபாத் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் ராஜஸ்தான் ராயல்சை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்.

முதலில் பந்தடித்த ஹைதராபாத் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் குமார் ரெட்டி ஆட்டம் இழக்காமல் 42 பந்துகளில் 76 ஓட்டங்களை விளாசினார்.

பிறகு விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ், கடைசி பந்து வரை வெற்றி வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொண்டது. இறுதியில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்தது ராஜஸ்தான்.

அந்த அணியின் ரியான் பராக் 49 பந்துகளில் 77 ஓட்டங்களைக் குவித்தார்.

தற்போதைய ஐபிஎல் பருவத்தில் அணிகள் 31 முறை 200 ஓட்டங்களுக்கு மேல் விளாசியுள்ளன. அதிலும் ஹைதராபாத், சென்ற மாதம் ஆக அதிக ஐபிஎல் ஓட்டங்களுக்கான சாதனையை இருமுறை முறியடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்