தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க டி20 அணியில் முன்னாள் நியூசிலாந்து வீரர்

1 mins read
279228d7-7ff4-42cf-8f0e-deeaa298aed1
ஆண்டர்சன் இதற்கு முன்னர் நியூசிலாந்து அணிக்காக இரண்டு முறை டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். - படம்: ஊடகம்

நியூயார்க்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கோரி ஆண்டர்சன் உலகக் கிண்ண டி20 தொடருக்கான அமெரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டர்சன் இதற்குமுன் நியூசிலாந்து அணிக்காக இரண்டு முறை டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

மேலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் பங்கேற்றார். அதில் நியூசிலாந்து அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

33 வயதான ஆண்டர்சன் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூசிலாந்துக்காக விளையாடவில்லை.

அவர் கடந்த மாதம் அமெரிக்காவுக்காக முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கினார்.

குறிப்புச் சொற்கள்