தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டெழுந்த சிராஜ்

1 mins read
885d5dd9-c508-40e8-8605-2a4150248b28
பெங்களுரு அணியின் சிராஜ். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இவ்வாண்டின் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நம்பிக்கை தரும் வகையில் மீண்டெழுந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.

அண்மைக் காலமாக சிராஜ் சற்று சிரமப்பட்டுவந்தார். எனினும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎஸ் ஆட்டத்தில் புதிய பந்தைக் கொண்டும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த சிராஜ் நிரூபித்தார்.

ஆட்டத்தில் அடுத்தடுத்த ஓவர்களில் குஜராத்துக்கு முதலில் களமிறங்கிய விரிதிமன் சஹா, அணித்தலைவர் ‌ஷுப்மன் கில் ஆகியோரை சிராஜ் வெளியேற்றினார்.

முதலில் பந்தடித்த குஜராத் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு 38 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பெங்களூரு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது பெங்களூரு.

குறிப்புச் சொற்கள்