தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படுதோல்வி அடைந்தும் மனந்தளராத டென் ஹாக்

1 mins read
bdf4552f-ea71-4160-9ff3-0f74470ca34c
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவிடம் 4-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் சுருண்டது. இந்த ஆட்டம் மே 6ல் நடைபெற்றது.

மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி அடைந்தபோதிலும் தம்மால் மட்டுமே அதை மீண்டும் வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்று சிகரம் தொட வைக்க முடியும் என்று அடித்துக் கூறுகிறார் அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

கிறிஸ்டல் பேலசுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த யுனைடெட், லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த பருவத்தில் ஐரோப்பிய நிலை காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற முடியாத அபாயத்தை அது எதிர்நோக்குகிறது.

“தொடர்ந்து போராடுவேன். என்னால் முடிந்த அளவுக்கு குழுவைத் தயார்ப்படுத்தினேன். ஆனால் வெற்றி பெற அது போதவில்லை. இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் முனைப்புடன் செயல்பட்டு அடுத்த ஆட்டத்துக்கு யுனைடெட்டின் ஆட்டக்காரர்களைத் தயார்ப்படுத்த இருக்கிறேன்,” என்று மனந்தளராமல் தெரிவித்தார் டென் ஹாக்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்