தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவர்களுடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு 3 மி. ரூபாய் அபராதம்

1 mins read
de8bfbde-738c-487c-873c-22893fb16936
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவரின் முடிவை மதிக்காமல் நடந்துகொண்டதற்காக ராஜஸ்தானின் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மூன்று மில்லியன் ரூபாய் (491,580 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.

ஆட்டத்தில் தான் வெளியேற்றப்பட்டதாக நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாம்சன் அடித்த பந்தை டெல்லியின் ‌ஷே ஹோப் பிடித்தார். ஆனால், திடல் எல்லைக்கு அருகே அவர் பந்தைப் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது.

ஆட்டத்தில் முதலில் பந்தடித்த டெல்லி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்களை விளாசியது.

அதற்குப் பிறகு ராஜஸ்தான், எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது. 46 பந்துகளில் 86 ஓட்டங்களைக் குவித்தார் சாம்சன்.

குறிப்புச் சொற்கள்