தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமர்சகர்கள் வாயை அடைத்த கோஹ்லி

1 mins read
10ee8c39-7a14-45c4-b786-bb496bcdff73
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல உறுதுணையாக இருந்தார் விராத் கோஹ்லி.

பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லியின் பெங்களூரு அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. 47 பந்துகளில் 92 ஓட்டங்களைக் குவித்தார் கோஹ்லி.

முதலில் பந்தடித்த பெங்களுரு ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்களை விளாசியது. பிறகு பஞ்சாப் 181 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஐபிஎல் பருவத்தில் கோஹ்லி 12 ஆட்டங்களில் 634 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரே இப்பருவத்தில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக இருக்கிறார்.

இருந்தாலும், ஐபிஎல்லில் கோஹ்லியின் பந்தடிப்பு விகிதம் குறைவாக இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். அவரின் பந்தடிப்பு விகிதம் 153.51 ஆகும்

அப்படியிருக்கையில், பஞ்சாப்புக்கு எதிராக கோஹ்லி விளையாடிய விதம் விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில் அமைந்தது.

குறிப்புச் சொற்கள்