‌ஷுப்மன் கில்லுக்கு 2.4 மி. ரூபாய் அபராதம்

‌ஷுப்மன் கில்லுக்கு 2.4 மி. ரூபாய் அபராதம்

படம்: ஏஎஃப்பி

11 May 2024 - 7:24 pm

1 mins read

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் அணியான குஜராத் டைட்டன்சின் அணித் தலைவர் ‌ஷுப்மன் கில்லுக்கு ஆட்டக் கட்டணத்தின் 25 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று (மே 10) அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓட்ட விகிதத்தைக் குறைவாக வைத்துக்கொண்டதற்காக கில்லுக்கு 2.4 மில்லியன் ரூபாய் (38,918 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது.

ஆட்டத்தில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத். முதலில் பந்தடித்த அந்த அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ஓட்டங்களைக் குவித்தது.

பிறகு சென்னை எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது.

குஜராத்தின் சாய் சுதர்சன், கில் இருவரும் சதமடித்தனர். 51 பந்துகளில் 103 ஓட்டங்களை விளாசினார் சுதர்சன். கில், 55 பந்துகளில் 104 ஓட்டங்களை விளாசினார்.

குறிப்புச் சொற்கள்