மான்செஸ்டர்: மே 12ஆம் தேதியன்று நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆர்சனலிடம் 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி அடைந்தது.
இதுவே இப்பருவத்தில் சொந்த விளையாட்டரங்கான ஓல்டு டிராஃபர்ட்டில் யுனைடெட் சந்தித்துள்ள ஒன்பதாவது தோல்வியாகும்.
தமது ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாகத் தோல்வியின் பிடியில் சிக்கியதாக யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக யுனைடெட்டின் குறைந்தது ஆறு தற்காப்பு ஆட்டக்காரர்களால் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க முடியாமல் போனது.
நட்சத்திர வீரர்கள் புரூனோ ஃபெர்னான்டஸ், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகியோரும் காயம் காரணமாக விளையாடவில்லை.
யுனைடெட் தற்போது 54 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

