லிலர்பூல்: கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிவர்பூல் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக இருந்து வருகிறார் யர்கன் கிளோப்.
இவரது அப்பயணம் மே 19ஆம் தேதி நடக்கும் லிவர்பூல் - உல்வ்ஸ் ஆட்டத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்டு விளையாட்டரங்கில் நடைபெறும்.
இந்நிலையில், மே 13ஆம் தேதியன்று ஆஸ்டன் வில்லா குழுவை லிவர்பூல் எதிர்த்தாடியது. ஆட்டம் வில்லா பார்க்கில் நடைபெற்றது.
இரு குழுக்களும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.
லிவர்பூல் வெற்றி பெறாதபோதிலும் வில்லா பார்க்கில் கூடிய அதன் ரசிகர்கள், கிளோப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பினர்.
இதைக் கண்டு கிளோப் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
லிவர்பூல் ரசிகர்களுடன் தமக்கு இருக்கும் உறவு மிகவும் உன்னதமானது என்று ஆட்டத்துக்குப் பிறகு கிளோப் கூறினார்.
சிறப்பாகச் செயல்பட்ட தம் ஆட்டக்காரர்களை கிளோப் வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.