காணொளி உதவி நடுவர் முறையை நீக்குவது தொடர்பாக இபிஎல் குழுக்கள் வாக்களிப்பு

காணொளி உதவி நடுவர் முறையை நீக்குவது தொடர்பாக இபிஎல் குழுக்கள் வாக்களிப்பு

1 mins read
cfbd1b82-2785-4e26-b23f-c01b350327b3
காணொளி உதவி நடுவர் முறையை நீக்க வேண்டும் என்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் 20 குழுக்களில் 14 குழுக்கள் வாக்களித்தால் அடுத்த பருவத்திலிருந்து காணொளி உதவி நடுவர் முறை கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: காணொளி உதவி நடுவர் முறையை நீக்க இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் வாக்களிக்க இருக்கின்றன.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் வருடாந்திர பொதுக் கூட்டம் ஜூன் 6ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

பொதுக் கூட்டத்தில் வாக்களிப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காணொளி உதவி நடுவர் முறையை நீக்க வேண்டும் என்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் 20 குழுக்களில் 14 குழுக்கள் வாக்களித்தால் அடுத்த பருவத்திலிருந்து காணொளி உதவி நடுவர் முறை கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காணொளி உதவி நடுவர் முறையை நீக்க வேண்டும் என்று உல்வ்ஸ் குழு விண்ணப்பம் செய்துள்ளது. அதன்மூலம் பல சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்கப்படுவதாக அது குறைகூறியது. இது இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் தரத்தைப் பாதிப்பதாக அது கூறியது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நடுவர்கள் சரியான முடிவை எடுக்க, அவர்களுக்கு உதவும் வகையில் காணொளி உதவி நடுவர் முறை 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்