லண்டன்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
வெஸ்ட் ஹேம் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி, லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது. தொடர்ந்து நான்காவது முறையாக லீக் பட்டத்தை அது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஆர்சனலும் மூன்றாவது இடத்தை லிவர்பூலும் பிடித்தன.
இவை ஒரு புறம் இருக்க, பிரிமியர் லீக்கின் கடைசி நாளன்று குழுக்கள் கோல் மழை பொழிந்தன.
மொத்தம் 37 கோல்கள் போடப்பட்டன.
இதன்மூலம் இப்பருவத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக அதிகமான கோல்கள் போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
களமிறங்கப்பட்ட 380 ஆட்டங்களில் மொத்தம் 1,246 கோல்கள் போடப்பட்டன.
நியூகாசல் குழு, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமான கோல்களைப் போட்டது. அக்குழு இம்முறை மொத்தம் 85 கோல்களைப் போட்டது.