சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை மே 21ல் சிங்கப்பூரைச் சேர்ந்த 17 வயது சித்தார்த் ஜகதீஷ் பெற்றார்.
இவர் சிங்கப்பூரின் ஆறாவது கிராண்ட்மாஸ்டர். அதுமட்டுமல்லாது, சிங்கப்பூரின் ஆக இளைய கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமை இவரைச் சேரும்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஷார்ஜா நகரில் நடைபெற்ற சுதரங்கப் போட்டியில் சித்தார்த் போட்டியிட்டார்.
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற அந்தப் போட்டியில் எஞ்சியிருந்த இரண்டு ஆட்டங்களில் ஒரு புள்ளி எடுத்தால் போதும் என்ற நிலையில், எட்டாவது சுற்றில் அவர் உலகத் தரவரிசையில் 34வது இடத்தில் உள்ள ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் ஆட்ரே எசிபென்கோவைத் தோற்கடித்தார்.
இதன்மூலம் அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதில் எனது முழுக் கவனம் இருந்தது. இனி நிம்மதியாக சதுரங்கம் விளையாடலாம்,” என்றார் சித்தார்த்.