தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: மகுடம் சூடிய கோல்கத்தா அணி

1 mins read
d82ceecc-70eb-4bd0-8b77-11a797bd0f78
இறுதி ஆட்டத்தில் வாகை சூடி, கொண்டாட்ட மழையில் நனைந்த கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் (ஐபிஎல்) இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கிண்ணத்தை ஏந்தியது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த ஆட்டம் மே 26ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய கோல்கத்தா அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைக் குவித்தது.

குறிப்புச் சொற்கள்