புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வில்லா நிர்வாகி யுனாய் எமேரி

1 mins read
1b7716eb-1090-411b-a48b-aad9fc7cc660
யுனாய் எமேரி. - படம்: பெரித்தா ஹரியான்

பர்மிங்ஹம்: மேலும் ஐந்தாண்டுகளுக்கு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆஸ்டன் வில்லாவின் நிர்வாகியாகத் தொடர வகைசெய்யும் ஒப்பந்தத்தில் யுனாய் எமேரி கையெழுத்திட்டுள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 52 வயது எமேரியின்கீழ், அடுத்த பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது வில்லா. 2022ஆம் அண்டு அக்டோபர் மாதம் எமேரி நிர்வாகியாகப் பொறுப்பேற்றபோது அக்குழு பிரிமியர் லீக் பட்டியலில் 17வது இடத்தில் இருந்தது.

தனது முதல் பருவத்தில் வில்லாவைப் பட்டியலில் ஏழாவது இடத்தில் முடிக்கவைத்த எமேரி, இரண்டாவது பருவத்தில் நான்காவது இடத்தைப் பிடிக்கச் செய்தார்.

முன்னாள் ஆர்சனல் நிர்வாகியான எமேரியின் தலைமையில் வில்லா இந்தப் பருவம் யூரோப்பா கான்ஃபிரன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற்றது. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அக்குழு ஐரோப்பிய போட்டி ஒன்றுக்குத் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

கான்ஃபிரன்ஸ் லீக்கில் அரையிறுதிச் சற்று வரை முன்னேறவும் செய்தது வில்லா.

குறிப்புச் சொற்கள்