சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்குத் தயாராகும் ரியால் மட்ரிட்டின் ஜூட் பெலிங்ஹம்

1 mins read
904878bd-be08-4f04-8537-be9eb5bbe8e0
பயிற்சியில் ஈடுபட்ட ஜூட் பெலிங்ஹம் - REUTERS

மட்ரிட்: ஸ்பானிய லீக் பட்டத்தை ரியால் மட்ரிட் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.

இனி சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்துக்கு அது குறிவைத்துள்ளது.

அக்கிண்ணத்தை ரியால் வென்றால் ஸ்பானிய லீக்கையும் சாம்பியன்ஸ் லீக்கையும் ஐந்தாவது முறையாக ஒரே பருவத்தில் கைப்பற்றும் பெருமை அக்குழுவைச் சேரும்.

ரியால் மட்ரிட்டில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் களமிறங்குகிறார் ஜூட் பெலிங்ஹம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெலிங்ஹம், ரியாலுக்காகப் பல கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார்.

“இதுவே எனது முதல் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம். என் சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாது, எனது முன்னாள் குழுவுக்கு எதிராக களமிறங்குகிறேன். இப்படி நடக்கும் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. இது எனக்கு மிகவும் முக்கியமான ஆட்டம்,” என்றார் பெலிங்ஹம்.

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூன் 2ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. இந்த ஆட்டம் லண்டனில் உள்ள வெம்பிலி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மனும் ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்