தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் காற்பந்து: இங்கிலாந்து தோல்வி

1 mins read
8b0afa08-3c67-4504-8c9d-da2a83019a2f
யூரோ தகுதியாட்டத்தில் ஆட்டத்தில் இங்கிலாந்தின் லாரன் ஹெம்ப் (இடது), பிரான்சின் எலிசா டி அல்மெய்டா. - படம்: ஏஎஃப்பி

நியூகாசல்: பெண்கள் யூரோ காற்பந்துப் போட்டி தகுதியாட்டத்தில் இங்கிலாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிரான்ஸ்.

யூரோ நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து, ஆட்டம் தொடங்கி சுமார் அரை மணிநேரத்தில் முன்னுக்குச் சென்றது. ஆர்சனல் பெண்கள் குழுவைச் சேர்ந்த பெத் மீட், இங்கிலாந்தை முன்னுக்கு அனுப்பினார்.

முற்பாதியாட்டம் நிறைவடைவதற்கு முன்பு பிரான்சின் எலிசா டி அல்மெய்டா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். மேரி-அன்டுவான் கட்டோட்டோ பிற்பாதியாட்டத்தில் கோல் போட்டு பிரான்சை வெற்றியடையச் செய்தார்.

இந்த ஆட்டம் இங்கிலாந்தின் நியூகாசல் நகரில் நடைபெற்றது. இங்கிலாந்தின் சொந்த மண்ணில் அந்த அணியை வென்று திக்குமுக்காடச் செய்தது பிரான்ஸ்.

மற்றொரு யூரோ தகுதியாட்டத்தில் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளரான ஸ்பெயின், டென்மார்க்கை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

மற்ற யூரோ தகுதியாட்டங்கள் சிலவற்றில் பெல்ஜியம், செக் குடியரசை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது, போலந்தை 4-1 எனும் கோல் கணக்கில் ஊதித் தள்ளியது ஜெர்மனி.

குறிப்புச் சொற்கள்