நியூயார்க்: அமெரிக்க கண்டங்களில் நடந்து வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
முதலில் பந்தடித்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ஆக அதிகமாக குஷால் மென்டிஸ் 19 ஓட்டங்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் நோர்க்கியா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை வீரர்கள் கடுமையான சவால் கொடுத்தனர். இருப்பினும் தென்னாப்பிரிக்கா பந்தடிப்பாளர்கள் பொருமையுடன் விளையாடி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டினர்.
ஆட்ட நாயகன் விருது நோர்க்கியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த தோல்வி இலங்கை அணி அடுத்தச் சுற்றுக்குச் செல்லத் தடையாக இருக்கும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

