நியூயார்க்: டி20 உலகக் கிண்ணத் தொடரின் எட்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் அயர்லாந்தும் மோதுகின்றன.
இரண்டு அணிகளும் முதல் பிரிவில் உள்ளன.ஆட்டம் நியூயார்க்கில் சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை இரவு 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
2007ஆம் டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா அதன் பிறகு நடந்த ஏழு டி20 உலகக் கிண்ணத் தொடரிலும் இந்தியா கிண்ணத்தை வெல்லவில்லை.
அதனால் இம்முறை இந்திய அணி தனது முழுபலத்தையும் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணித் தலைவர் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராத் கோஹ்லிக்கு இது கடைசி டி20 உலகக் கிண்ணத் தொடராக இருக்கும் என்பதால் இருவரும் கிண்ணத்தை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்று கூறப்படுகிறது.
அயர்லாந்து பலமுறை பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளதால் இந்த ஆட்டத்தில் இந்தியா கவனமாக விளையாடக்கூடும்.

