லண்டன்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு முன்னதாக, தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் இங்கிலாந்துக் குழு சில ஆட்டங்களில் களமிறங்கியது.
அந்த வரிசையில், கடைசி ஆட்டமாக ஐஸ்லாந்துக்கு எதிராக அது விளையாடியது.
வெம்பிலி விளையாட்டரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
வெற்றி முகத்துடன் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிக்காக ஜெர்மனிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த இங்கிலாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
விளையாட்டரங்கத்தில் கூடியிருந்து இங்கிலாந்து ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதற்கிடையே, இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று இங்கிலாந்துக் குழுவின் நிர்வாகி கேரத் சவுத்கேட் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாகச் செயல்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.