நார்த் சவுண்ட் (வெஸ்ட் இண்டீஸ்): டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் பி பிரிவு ஆட்டத்தில் ஓமானை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து.
முதலில் பந்தடித்த ஓமான் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களை எடுத்தது. பிறகு 13.1 ஓவர்களிலேயே ஸ்கட்லாந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது ஸ்காட்லாந்து. அந்த அணியின் பிராண்டன் மெக்மலன் ஆட்டம் இழக்காமல் 61 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து சூப்பர் சிக்சஸ் சுற்றுக்குத் தகுதிபெற வலுவான நிலையில் உள்ளது. அதேவேளை, நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து சூப்பர் சிக்சசுக்கு முன்னேறும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) ஆஸ்திரேலியாவை வென்றால் ஸ்காட்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகும்.