நியூயார்க்: ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வென்றது இந்தியா.
முதலில் பந்தடித்த அமெரிக்கா எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை எடுத்தது. பிறகு 18.2 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.
மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ஓட்டங்களை எடுத்தது இந்தியா.
இந்த ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா வெற்றிகாண உறுதுணையாக இருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆட்டம் இழக்காத அவர் 49 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
ஆட்டத்தில் சூர்யகுமார்தான் இந்தியாவுக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது. ஏ பிரிவில் அயர்லாந்துக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடையாமல் இருந்தால் அமெரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.