தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராடி சூப்பர் 8 சுற்றுக்குச் சென்ற வெஸ்ட் இண்டீஸ்

1 mins read
6f1cc4bd-2af2-4300-9c00-53d32adf9e50
சிறப்பாக விளையாடினார் வெஸ்ட் இண்டீசின் ‌ஷேன் ரதர்ஃபர்ட். - படம்: இணையம்
multi-img1 of 2

சான் ஃபெர்னாண்டோ: ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்.

முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ், ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் நியூசிலாந்து, ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்தது.

இந்த சி பிரிவு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் ‌ஷேன் ரதர்ஃபர்ட். அவர் ஆட்டம் இழக்காமல் 39 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்தார்.

நியூசிலாந்துக்கு கிளென் ஃபிலிப்ஸ் ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார். அவர் 33 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசினார்.

இப்போட்டியில் அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் நியூசிலாந்து தோல்வியடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்