தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20: நேப்பாளத்தை வென்ற தென்னாப்பிரிக்கா, உகாண்டாவை வீழ்த்திய நியூசிலாந்து

1 mins read
பாகிஸ்தானின் கனவு கைகூடவில்லை
b12978e1-c1d5-4582-b193-362499feef24
ஓர் ஓட்ட வித்தியாசத்தில் நேப்பாளத்தை வென்றது தென்னாப்பிரிக்கா. - படம்: என்டிடிவி
multi-img1 of 2

செயிண்ட் வின்சென்ட்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி ஓர் ஓட்ட வித்தியாசத்தில் நேப்பாள அணியை வென்றுள்ளது.

இதன் மூலம் நேப்பாள அணி சூப்பர் 8 சுற்றில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.

முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய நேப்பாள அணி இறுதியில் 114 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியைத் தழுவியது.

டிரினிடாட்டில் நடந்த மற்றோர் ஆட்டத்தில், உகாண்டாவுடன் பொருதியது நியூசிலாந்து.

முதலில் பந்தடித்த உகாண்டா 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அது 40 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து 5.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புடன் 41 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதற்கிடையே, அயர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆட்டம் மழை பெய்ததால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் கனவு கைகூடாமற்போனது.

குறிப்புச் சொற்கள்