தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: அச்சுறுத்தலை எதிர்கொண்ட இத்தாலி

1 mins read
7f85d833-26c2-4359-a19a-863d0c3be19d
அல்பேனியாவை வென்ற பிறகு கொண்டாடும் இத்தாலிய வீரர்கள். - படம்: இபிஏ

டோர்ட்மண்ட்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியில் அல்பேனியாவுக்கு எதிரான பி பிரிவு ஆட்டத்தில் தடுமாற்றத்துடன் தொடங்கியபோதும் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது இத்தாலி.

ஆட்டம் தொடங்கி 23 நொடிகளில் அல்பேனியாவை முன்னுக்கு அனுப்பினார் நெடிம் பஜ்ராமி. யூரோ வரலாற்றில் அதுவே ஆக வேகமாக விழுந்த கோலாகும்.

ஆனால், 11 நிமிடங்களிலேயே கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் இத்தாலியின் அலெசாண்டிரோ பஸ்டோனி. அதற்கு சில நிமிடங்கள் கழித்து இத்தாலியின் நிக்கோலோ பரெல்லா இத்தாலியின் இரண்டாவது கோலைப் போட்டார். அதன்பிறகு கோல் ஏதும் விழவில்லை.

பி பிரிவில் ஸ்பெயினைச் சந்திக்கவிருக்கிறது இத்தாலி. அந்த ஆட்டத்தில் இத்தாலி இன்னும் அதிரடியாக விளையாடவேண்டும் என்று எச்சரித்துள்ளார் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லுசியானோ ஸ்பலெட்டி.

மற்றொரு பி பிரிவு ஆட்டத்தில் குரேவே‌ஷியாவை 3-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் பந்தாடியது. ஆட்டத்தில் இடம்பெற்ற ஸ்பெயினின் 16 வயது விளையாட்டாளரான லமீன் யமால், யூரோ வரலாற்றில் களமிறங்கிய ஆக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

யமால் நட்சத்திரமாக உருவெடுக்கும் ஆற்றல் படைத்தவர் என்று ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டெ பாராட்டியுள்ளார்.

ஏ பிரிவில் ஹங்கேரியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது சுவிட்சர்லாந்து. அதே பிரிவில், போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி 5-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை நசுக்கியது.

குறிப்புச் சொற்கள்