தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வியப்பளித்த ஆப்கானிஸ்தான்

2 mins read
c338c204-bb79-47b7-87eb-578deee17e2b
வெற்றியைக் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (வலது) - படம்: ஏஎஃப்பி

கிங்ஸ்டவுன்: டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ குரூப் 1 போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ரசிகர்களை வியப்பில் மூழ்கடித்து உள்ளது ஆப்கானிஸ்தான்.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இந்திய நேரப்படி ஞாயிறு காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் பூவா தலையா வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசியது. முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ஓட்டங்களைக் குவித்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ். வியாழக்கிழமை பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார்

அதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை ஹாட்ரிக் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா துரத்தியது.

நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், ஓட்டம் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மூன்றாவது ஓவரில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மிட்செல் மார்ஷை வெளியேற்றினார் நவீன்.

வார்னர் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நபி அவரை வெளியேற்றினார். அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஆட்டம் மட்டுமே ஆறுதல் தந்தது. 41 பந்துகளில் அவர் 59 ஓட்டங்கள் எடுத்தார் அவர்.

இறுதியில். 19.2 ஓவர்களில் 127 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா.

அடுத்த போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவும் பங்ளாதேஷுடன் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

இதற்கு முன்னர் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் 84 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்