பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் கோல்ஃப் போட்டிக்கு சிங்கப்பூரின் ஷனான் டான் தகுதிபெற்றுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் கோல்ஃப் விளையாடும் முதல் சிங்கப்பூரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
“60 பேர் விளையாடும் பெண்கள் கோல்ஃப் போட்டியில் இடம்பிடித்தது மிகப்பெரிய கெளரவம். மேலும் உலகின் முன்னணி வீரர்கள் பலருடன் போட்டியிடுவது புதிய அனுபவத்தைத் தரும்,” என்று 20 வயது ஷனான் டான் தெரிவித்தார்.
கோல்ஃப் போட்டி 1990 ஒலிம்பிக்கில் இடம்பெற்றது. ஆனால் அதன் பின்னர் அது ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கோல்ஃப் மீண்டும் சேர்க்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது.