தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: ஆஸ்திரியா தந்த இன்ப அதிர்ச்சி

1 mins read
db8a2e0c-a7f5-4221-a949-5a8ea1b2285c
ஆஸ்திரியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிறகு தனது வீரர்களுடன் கொண்டாடும் ஆஸ்திரியா பயிற்றுவிப்பாளர் ரால்ஃப் ரான்யிக் (வலது). - படம்: இபிஏ

பெர்லின்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியில் டி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரியா.

பிரான்ஸ், நெதர்லாந்து இருந்த டி பிரிவில் ஆஸ்திரியா சிறப்பாகச் செய்தது அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) எதிர்பாரா விதமாக நெதர்லாந்தை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரியா. டி பிரிவில் பிரான்ஸ், போலந்து மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் ஆஸ்திரியா முதலிடத்தைப் பிடித்தது.

வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரிய அணி.
வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரிய அணி. - படம்: ராய்ட்டர்ஸ்

டி பிரிவில் தனது அணி முதலிடத்தைப் பிடித்தது அற்புதமான செயல் என்றார் ஆஸ்திரியா பயிற்றுவிப்பாளர் ரால்ஃப் ரான்யிக்.

“எங்கள் வீரர் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் போட்டியின் முதல் ஆட்டத்தில் பிரான்சிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தோம். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள போலந்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம் (ஆஸ்திரியா 3-1 என வென்றது). அதைக் கருத்தில்கொள்ளும்போது இது அமோகமானச் செயலாகும்,” என்றார் ரான்யிக்.

சி பிரிவில் இங்கிலாந்தும் சுலோவீனியாவும் மோதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏற்கெனவே முடிவாகியிருந்தது.

அதே பிரிவில் செர்பியாவுடன் கோலின்றி சமநிலை கண்ட டென்மார்க்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனியைச் சந்திக்கும் டென்மார்க்.

குறிப்புச் சொற்கள்