தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20: இறுதியாட்டத்திற்கு முன்னேற துடிக்கும் இந்தியா

1 mins read
d232b03b-b297-4081-b777-d64be39ad8e7
இந்திய அணி இத்தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.  - படம்: ஏஎஃப்பி

கயானா: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.

ஆட்டம் கயானாவில் உள்ள விளையாட்டரங்கில் வியாழக்கிழமை, சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும்.

இந்திய அணி இத்தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, அர்‌ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா சிறப்பாக செய்ல்பட்டு வருகின்றனர்.

பந்தடிப்பிலும் அணித் தலைவர் ரோகித் சர்மா, ரி‌‌ஷப் பண்ட, ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடுகின்றனர். விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை அதனால் இந்த ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கையாக அணித்தலைவர் ஜாஸ் பட்லர் உள்ளார். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் சிறப்பாக செயல்படுகிறார்.

நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து தொடக்கத்தில் திணறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சூப்பர் 8 சுற்றில் முன்னேறியது.

2022ஆம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இரு அணிகளும் அரையிறுதியில் மோதின. அதில் இந்தியா படுதோல்வியடைந்தது.

அதனால் இம்முறை இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேற இந்தியா போராடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்