தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரிசில் பங்கேற்க ரஷ்யா, பெலருஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஒலிம்பிக் மன்றம்

1 mins read
c937f7fc-4bcf-4911-8049-d359816b1728
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்குகின்றன. - படம்: இணையம்

பாரிஸ்: 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரான்சில் 100 ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ரஷ்ய வீரர்கள் மெத்வடேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெலருசின் அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தினர் கூறுகையில், “ரஷ்யா மற்றும் பெலருஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்