பெர்லின்: யூரோ கிண்ணம் 2024 இரண்டாம் கட்டத்தை நெருங்கும் நிலையில், போட்டியிட்ட 24 அணிகளில் 8 வெளியேறியுள்ளன.
விறுவிறுப்பான ஆட்டம், துடிப்பான ரசிகர்கள் என்று ஜெர்மனி களைகட்டியிருந்தாலும், நட்சத்திர விளையாட்டாளர்கள் தெறிக்கும் ஆட்டத்தால் உயிரூட்டத் தவறிவிட்டனர்.
காயம், திடமின்மை, துரதிர்ஷ்டம் என்று பல காரணங்கள்.
போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாதனை எண்ணிக்கையாக ஆறாவது யூரோவில் விளையாடினாலும் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் பிரகாசிக்கவில்லை. அடுத்த நாக்அவுட் சுற்றில் 39 வயது ரோனால்டோ கோல் புகுத்தினால், யூரோ போட்டியில் கோல் அடித்த ஆக வயதான ஆட்டக்காரர் என்னும் சிறப்பைப் பெறுவார்.
உலகின் தலைசிறந்த வீரராகக் கருதப்படுபவர் கிலியன் எம்பாப்பே. போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பெனால்டி மூலம் 1-1 என ஏமாற்றமளிக்கும் டிராவில் ஆட்டத்தை முடித்ததால், பிரான்ஸ் குரூப் டியில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அவர் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பொன்னான வாய்ப்பை வீணடித்தார். உடைந்த மூக்குடன் நெதர்லாந்திற்கு எதிராக பிரான்ஸ் சமநிலை கண்ட ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
போலந்தின் வீரரான ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தொடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நெதர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. பார்சிலோனா தாக்குதல் ஆட்டக்காரரான அவர் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று போலந்து வெளியேற நேர்ந்தது.
இங்கிலாந்து ஜோடியான ஜூட் பெலிங்ஹம் , ஹேரி கேன் ஆகியோர் முறையே செர்பியா, டென்மார்க்கிற்கு எதிராக திறந்த ஆட்டத்தில் கோல் அடித்தனர். இந்த சீசனில் ரியால் மட்ரிட் மற்றும் பயர்ன் மியூனிக்கில் முறையே அவர்கள் செழித்தோங்கினார்கள். ஆனால், இப்போட்டியில் அவர்களின் திறன் மங்கியே காணப்பட்டது.
அட்லெடிகோ மட்ரிட்டுக்கு விளையாடும் பிரான்சின் கிரீஸ்மன், மான்செஸ்டர் சிட்டியின் இங்கிலாந்து வீரர் பில் ஃபோடன் ஆகியோரும் ஏமாற்றத்தையே வழங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பெல்ஜியத்தின் சிறந்த ஸ்கோரர் ரொமேலு லுக்காகுவும் இதுவரை ஒரு கோல்கூடப் போடவில்லை.
38 வயதான மூத்த வீரர் லூக்கா மோட்ரிச், குரோவேஷியாவின் நட்சத்திரம். இத்தாலிக்கு எதிராக கோல் அடித்தார், ஆனால் பெனால்டியைத் தவறவிட்டு முதல் இரண்டு போட்டிகளில் போராடி, இறுதியில் அவரது நாடு வெளியேற்றப்பட்டது.
இதுவரை பிரகாசித்த வீரர்கள் பெரும்பாலும் ஆச்சரியத்தை அளித்துள்ளனர்.
இங்கோலோ கோன்டே ஓராண்டுக்கு முன்னர் சவூதி அரேபியா அணியில் சேர்ந்த போதிலும், பிரான்சின் முக்கிய ஆட்டக்காரராக நிரூபித்து வருகிறார். அதே நேரத்தில் திறமையான இளம் வீரர் ஜமால் மூசியாலா, மூத்த நட்சத்திரங்களான டோனி குரூஸ், இல்காய் குண்டொவான், கய் ஹேவர்ட்ஸ் ஆகியோரை விட ஜெர்மனியின் நம்பிக்கையாக உள்ளார்.
‘டார்கெட் மேன்’ நிக்லாஸ் ஃபுல்க்ரக் ஜெர்மனிக்காக மூசியாலாவைப் போல இரண்டு முறை கோல் அடித்துள்ளார், அதே நேரத்தில் சுலோவாக்கியாவின் இவான் ஷ்ரான்ஸ், ருமேனியாவின் ரஸ்வான் மரின் ஆகியோரும் தங்கள் பெயருக்கு ஒரு ஜோடி கோல்களைப் புகுத்தியுள்ளனர்.
நெதர்லாந்தின் முன்னோடியான கோடி ஹக்போவும் இரண்டு கோல்களை அடித்துள்ளார். ஆனால் போட்டியில் தற்போதைய அதிக கோல் அடித்தவர் அறிமுக வீரர் ஜார்ஜியாவின் ஜார்ஜஸ் மிகாடாட்ச்எ அவர் போட்ட மூன்று கோல்களில் இரண்டு பெனால்டி வாய்ப்புகள்.
ஜூலை 14 அன்று பெர்லினில் மீதமுள்ள 16 அணிகளில் ஒன்று வெற்றிக்கிண்ணத்தைப் பெறுவதற்கு முன்னர், ஆட்டக்களத்தில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் வழங்கவுள்ள விருந்துக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.