டோர்ட்மண்ட்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குப் போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது.
ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் அக்குழு 2-0 எனும் கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.
இடைவேளையின்போது இரண்டு குழுக்களும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தன.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை கோலாக்கினார் காய் ஹவெர்ட்ஸ்.
பிறகு ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் ஜமால் முஸ்சியாலா ஜெர்மனியின் இரண்டாவது கோலைப் போட்டு தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

