பெர்லின்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான இத்தாலியின் கிண்ணக் கனவு கலைந்தது.
ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்திடம் அது 2-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
ஆட்டத்தின் 37வது, 46வது நிமிடங்களில் சுவிட்சர்லாந்து போட்ட கோல்கள் இத்தாலியின் கதையை முடித்து வைத்தது.
எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் தனது ரசிகர்களுக்கு பேரளவில் ஏமாற்றத்தை அளித்த இத்தாலியக் குழு, ஆட்டம் முடிந்ததும் சோகமே உருவாக திடலைவிட்டு வெளியேறியது.
இதற்கு முற்றிலும் மாறாக, சுவிட்சர்லாந்து ஆட்டக்காரர்கள் வெற்றிக் களிப்பில் மூழ்கினர்.

