தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ 2024: ஜார்ஜியாவை வெளுத்துக்கட்டிய ஸ்பெயின்

1 mins read
c9ea9001-a45a-4be4-b681-2b67044cca88
ஜார்ஜியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயினின் மூன்றாவது கோலைப் போடும் நிக்கோ வில்லியம்ஸ் (இடது). - படம்: இபிஏ

கொலோன்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜார்ஜியாவை 4-1 எனும் கோல் கணக்கில் ஊதித் தள்ளியது ஸ்பெயின்.

ஆனால் தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஸ்பெயின், ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் அந்த அணியின் ராபின் லெ நோர்மண்ட் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் ஜார்ஜியா முன்னுக்குச் சென்றது.

எனினும், 39வது நிமிடத்தில் ஸ்பெயினின் ரொட்ரி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். பிற்பாதியாட்டத்தில் அணி மேலும் மூன்று கோல்களைப் போட்டு ஜார்ஜியாவை நசுக்கியது.

ஃபேபியன் ரூயிஸ், நிக்கோ வில்லியம்ஸ், டேனி ஒல்மோ ஆகியோர் ஸ்பெயினின் இதர மூன்று கோல்களைப் போட்டனர்.

இந்த யூரோ போட்டியில் கோல்களைக் குவித்து அபாரமாக விளையாடிவரும் ஸ்பெயின், அதனைப் போலவே அசத்திவரும் ‌ஜெர்மனியைக் காலிறுதிச் சுற்றில் சந்திக்கும்.

இப்போட்டியிலிருந்து வெளியேறிவிட்டாலும் ஜார்ஜியர்கள் தங்கள் நாட்டில் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

ஜார்ஜியா தலைநகர் டிப்லிசியில் கொண்டாடும் ரசிகர்கள்.
ஜார்ஜியா தலைநகர் டிப்லிசியில் கொண்டாடும் ரசிகர்கள். - படம்: இபிஏ

முதன்முறையாக முக்கிய அனைத்துலகப் போட்டி ஒன்றுக்குத் தகுதிபெற்றது மட்டுமின்றி முதல் சுற்றையும் தாண்டி ஜார்ஜியா வரலாறு படைத்தது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்