தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரையிறுதியில் இங்கிலாந்து; சுவிட்சர்லாந்துக்கு ஏமாற்றம்

1 mins read
ba6b9439-80ff-438b-9959-78f97c642e19
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி

டசல்டோர்ஃப்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 7ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், கடுமையான போராட்டத்துக்குப் பிறகு சுவிட்சர்லாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து கோல் போட்டு முன்னிலைக்குச் சென்றது.

அரையிறுதி ஆட்டம் தொடும் தூரத்தில் இருக்கிறது என்று கொண்டாடத் தயாராக இருந்த சுவிட்சர்லாந்துக்கு ஐந்து நிமிடங்கள் கழித்து பேரிடி விழுந்தது.

இங்கிலாந்தின் சாக்கா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.

கூடுதல் நேரத்துக்குப் பிறகும் ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிய, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.

இதில் இங்கிலாந்து 5-3 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்