மியூனிக்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ 2024 கிண்ண காற்பந்துப் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
அதில், ஸ்பெயின், ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.
இதனையடுத்து, அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி குரூஸ் அறிவித்தார்.
டோனி குரூசைத் தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் அனைத்துலக காற்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பயர்ன் மியூனிக் அணியுடன் மேலும் ஒரு பருவத்தில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.