ஒரே நாளில் 15 வீரர்களை வாங்கிய காற்பந்துக் குழு

ஒரே நாளில் 15 வீரர்களை வாங்கிய காற்பந்துக் குழு

1 mins read
89fbc2de-32ee-47b3-8d3e-aafdb81bc867
மோர்கெம் குழுவின் இணையத்தளத்தின் படம். - படம்: மோர்கெம் இணையத்தளம்

மோர்கெம்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவான மோர்கெம், ஒரே நாளில் 15 விளையாட்டாளர்களை வாங்கி விநோதமாகச் செயல்பட்டது.

லீக் 2 எனப்படும் இங்கிலாந்து காற்பந்து லீக்குகளுக்கான தரவரிசையில் நான்காவது நிலையில் இருக்கும் லீக்கில் போட்டியிடும் மோர்கெமுக்கு, வரிக் கட்டணம் சரியாக செலுத்தாததால் கடந்த மார்ச் மாதம் புதிய வீரர்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டது. நிதிக் காரணங்களுக்காக ஏப்ரல் மாதம் அக்குழுவுக்கு லீக்கில் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டன.

அண்மையில் கட்டணங்களை செலுத்திய மோர்கெம், மீண்டும் விளையாட்டாளர்களை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிதும் நேரத்தை வீணடிக்காமல் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) 15 வீரர்களை வாங்கிக் குவித்தது மோர்கெம்.

குறிப்புச் சொற்கள்