பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் ஆஸ்திரேலியாவின் கேமரன் மெக்கவோய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இப்பிரிவில் முதன்முறையாக வாகை சூடியுள்ளது ஆஸ்திரேலியா. பிரிட்டனின் பென் புரவுட் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் வென்றுள்ள முதல் ஒலிம்பிக் பதக்கம் இது.
வெண்கலப் பதக்கம், பிரான்சின் ஃபுலோரோன் மனாடூவுக்குச் சென்றது.12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் மனாடூ இப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.