மீண்டும் களமிறங்கும் டாவிட் ட கியா

1 mins read
d4115046-a7ce-4be5-8b46-d228cbb1788f
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளரான டாவிட் ட கியா இத்தாலியில் விளையாடவுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஃபுளோரன்ஸ் (இத்தாலி): பிரபல காற்பந்து கோல் காப்பாளரான டாவிட் ட கியா ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிபுணத்துவக் காற்பந்தில் களமிறங்கவுள்ளார்.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் கோல் காப்பாளரான ட கியா, ஒப்பந்தம் நிறைவேறியதும் 2023ஆம் ஆண்டு அக்குழுவிலிருந்து வெளியேறினார். 12 ஆண்டுகள் யுனைடெட்டில் விளையாடிய பிறகு அவர் எந்தக் குழுவிலும் சேரவில்லை.

இப்போது ட கியாவை இத்தாலியின் சரீ ஆ லீக்கில் போட்டியிடும் ஃபியொரென்டினா, அவரைச் சேர்த்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட கியா எந்தக் குழுவிலும் ஒப்பந்தம் செய்துகொள்ளாதிருந்ததால் அவரை வாங்கக் கட்டணம் ஏதும் இல்லை.

பல ஆண்டுகள் யுனைடெட்டுக்கு அபாரமாக விளையாடி அசத்திய 33 வயது ட கியா, 45 முறை ஸ்பெயின் தேசிய அணிக்கு விளையாடியிருக்கிறார். அவரின் புதிய குழுவான ஃபியொரென்டினா, கடந்த சரீ ஆ பருவம், பட்டியலில் எட்டாவது இடத்தில் முடித்தது.

குறிப்புச் சொற்கள்