தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

184 நாடுகளை விட அதிக தங்கம் வென்ற பிரான்ஸ் நீச்சல் வீரர்

1 mins read
d47faeb2-9508-4f2a-86ef-4299375aa811
22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட்டுக்கு இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ்தான் முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுகள். - படங்கள்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த ஆண்டு நடைபெற்றுவந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவு பெற்றது. சுவாரஸ்யமான தருணங்கள் பல நிறைந்ததாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமைந்தன.

அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார்.

அதாவது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.

இந்த ஆண்டு ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான 200 மீட்டர் நெஞ்சுநீச்சல், 200 மீட்டர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல், 200 மீட்டர் தனிநபர் பலபாணி நீச்சல், 400 மீட்டர் தனிநபர் பலபாணி அஞ்சல் நீச்சல் ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4x400 மீட்டர் பலபாணி அஞ்சல் நீச்சல் போட்டியிலும் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

குறிப்புச் சொற்கள்