பேங்காக்: மேசைப்பந்தின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஐசக் குவெக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) இரவு நடந்த ஆட்டத்தில் ஐசக் இந்தோனீசியாவின் பிமா அப்டி நெகராவை 11-6, 11-8, 11-3, 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 19 வயது ஐசக் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், ஆண்கள் குழுப் போட்டி ஆகியவற்றில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.

