தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'புஷ்பா' நாயகியின் ஆட்டத்துக்கு அசைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

1 mins read
eb406215-c80e-4942-8ecf-3acdf3ae6db2
ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் 'புஷ்பா' திரைப்படப் பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா. படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் மார்ச் 31 (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவில் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா, அரிஜித் சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் நடன, பாடல் அங்கங்களைப் படைத்தனர்.

அதைக் கண்டுகளித்த ரசிகர் பட்டாளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரும் ஒருவர்.

'புஷ்பா' திரைப்படத்தின் 'சாமி சாமி' பாடலுக்கு மேடையில் ஆடினார் ராஷ்மிகா. வர்ணனையாளர் அறையில் அமர்ந்திருந்த கவாஸ்வர், ராஷ்மிகாவின் ஆட்டத்துக்கு அசைந்தார். அவருடன் இருந்த சக வர்ணனையாளர்கள் இருவர், கவாஸ்கரை உற்சாகமூட்டினர். இதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது.

View post on Instagram