செயின்ட் ஜான்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எட்டாண்டு காலம் விளையாடியுள்ளார் 35 வயதான நரைன். கடைசியாக கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அவ்வணிக்காக டி20 போட்டியில் அவர் ஆடினார்.
ஆறு டெஸ்ட், 65 ஒருநாள், 51 டி20 போட்டிகள் என மொத்தம் 122 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடியுள்ள நரைன், மொத்தம் 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
2012ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த நரைன், 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் தொடக்க முதலே கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் விளையாடி வருகிறார்.