தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புஜாராவிற்கு ஓர் ஆட்டம் தடை

1 mins read
0346fc5d-8835-4b92-9cc2-4f0634e68f9a
கவுன்டி போட்டிகளில் சசக்ஸ் அணியின் தலைவராகச் செயல்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலாந்தின் இரண்டாம் நிலை கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் சசக்ஸ் அணியின் தலைவராகச் செயல்படும் இந்தியாவின் சேத்தேஸ்வர் புஜாராவிற்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சசக்ஸ் அணி நான்காம் முறையாகத் தண்டப்புள்ளி பெற்றதை அடுத்து, புஜாராவிற்குத் தடை விதிக்கப்பட்டது.

அண்மையில் லெஸ்டர்ஷியருக்கு எதிரான ஆட்டத்தில் சசக்ஸ் வெற்றிபெற்றபோதும், அவ்வணிக்கு மூன்றாவது, நான்காவது முறையாகத் தண்டப்புள்ளி வழங்கப்பட்டது.

கவுன்டி போட்டி விதிமுறைகளின்படி, ஒரு பருவத்தில் நான்கு முறை தண்டப்புள்ளி பெறும்போது தானாகவே 12 புள்ளிகள் கழிக்கப்பட்டுவிடும். அத்துடன், சம்பந்தப்பட்ட அணியின் தலைவர்க்கும் ஓர் ஆட்டம் தடை விதிக்கப்படும்.

இந்தப் பருவத்தில் சசக்ஸ் அணிக்காக மூன்று சதம் அடித்துள்ள புஜாரா, சராசரியாக 54.08 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்