தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுடன் மோதும் ஆஸ்திரேலிய டி20 அணியில் மாற்றம்

1 mins read
fbd0310c-4c60-4e6d-9e89-4b468232160f
ஸ்டீவ் ஸ்மித் (வலது), ஆடம் ஸாம்பா உள்ளிட்ட அறுவர் நாடு திரும்புகின்றனர். - படம்: ஏஎஃப்பி

கௌகாத்தி: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரில் பங்குபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணியில் ஆறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கெதிரான இருதரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதலிரு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸாம்பா இருவரும் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

மூன்றாவது போட்டி முடிந்ததும் கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், சான் அபட் ஆகிய நால்வரும் ஆஸ்திரேலியா திரும்புகின்றனர்.

விக்கெட் காப்பாளர் ஜோஷ் ஃபிலிப், அதிரடி ஆட்டக்காரர் பென் மெக்டர்மட் இருவரும் மூன்றாவது போட்டிக்குமுன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துவிட்டனர்.

நான்காவது போட்டிக்கு முன்னதாக பென் டுவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் இருவரும் அவ்வணியுடன் இணைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்