12 ஓட்டங்களில் அயர்லாந்தை வென்ற கனடா

1 mins read
94bc38ba-22db-44ba-96c0-025112a6a3e1
இம்முறை உலக கிண்ணத்தில் பலமில்லா அணிகள் சிறப்பாக விளையாடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து வருகிறது.  - படம்: ஊடகம்

நியூயாரக்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 12 ஓட்டங்களில் வென்று கனடா சாதித்துள்ளது.

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கனடாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

பந்தடித்த கனடா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது.

ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கனடாவை நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மோவ்வா இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை மீட்டனர். நிக்கோலஸ், 49 ஓட்டங்களும் ஸ்ரேயாஸ், 37 ஓட்டங்களும் எடுத்தனர்.

138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கனடாவின் பந்துவீச்சாளர்கள் கடுமையான போட்டி கொடுத்தனர்.

ஓட்டங்கள் எடுக்க தடுமாறிய அயர்லாந்து பந்தடிப்பாளர்கள் ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளையும் விரைவாக இழந்து தடுமாறினர்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து, 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இம்முறை உலக கிண்ணத்தில் பலமில்லா அணிகள் சிறப்பாக விளையாடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து வருகிறது. 

குறிப்புச் சொற்கள்