டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு

1 mins read
59a3c48e-c73a-4600-a7b3-cad453a0e9ce
இந்தியாவுடன் 15ஆம் தேதி நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் சுற்று லீக் ஆட்டத்தைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

டி20 கிரிக்​கெட் உலகக் கிண்ணத் தொடர் வரும் 7ஆம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்குகிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொள்கின்றன.

இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது. இதே பிரி​வில் போட்டியை நடத்​தும் நடப்பு வெற்றியாளரான இந்​தி​யா, நமீபியா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

அரசியல் காரணங்களால் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென பங்ளாதே‌ஷ், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் முறையிட்டது.

அதை மன்றம் ஏற்கவில்லை. அதனால் பங்ளாதே‌‌ஷ் அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறி வந்தது. இதைக் கிரிக்கெட் மன்றம் கடுமையாக எச்​சரித்தது.

இந்நிலையில், இந்தியாவுடன் 15ஆம் தேதி நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்